அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 13 ஜூலை, 2011

இந்திய அமைச்சரவை மாற்றியமைப்பு

ந்திய அமைச்சரவையை பிரதமர் மன்மோகன் சிங் மாற்றியமைத்துள்ளார்.
இது வரை அமைச்சரவையில் இருந்த தயாநிதி மாறன், முரளி தியோரா, எம் எஸ் கில் உள்ளிட்ட 7 பேர் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.


இதுவரை சுற்றுச் சூழல்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் கேபினட் அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு ஊரக மேம்பாட்டுத் துறை அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச் சூழல் துறை அமைச்சராகியுள்ளார்.
ஆனால் பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை, நிதி போன்ற முக்கிய அமைச்சகங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
மம்தா பேனர்ஜி மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்றதால் காலியான ரயில்வே அமைச்சு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG