அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 30 ஜூலை, 2011

போர்க்குற்ற விசாரணை கோரிக்கையை கைவிட சுமந்திரன் கோரிக்கை:

கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ்.ஒளி தொலைக்காட்சியில்
வெள்ளிக்கிழமை (29.07.2011) இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் லண்டனில் கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக தமிழ்மக்களின் கருத்துக்கள் கேட்கப்படவிருக்கின்றது. புலம்பெயர் தமிழர்களது செயற்பாடுகள் மேற்குலகின் ஆதரவைப் பெறவில்லை எனவும், அதில் மாற்றங்கள் தேவை எனவும் சுமந்திரன் அங்கு கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, அது பெரும்பான்மை சிங்கள மக்களால் ஏற்கக் கூடிய தீர்வாக அமைய வேண்டும் எனவும் அங்கு தெரிவித்துள்ள அவர், சிறிலங்கா அரசு மீதான போர்க் குற்ற விசாரணைக்கான கோரிக்கையைக் கைவிடவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துக்கள் தொடர்பாகவே தமிழ்மக்களின் கருத்துக்கள் கேட்கப்படவிருக்கின்றது. இதுதொடர்பாக உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் நீங்கள் அழைக்கலாம். இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நுpகழச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094112667977. யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஒரே ஒரு தமிழ் தொலைக்காட்சியான டான் யாழ் ஒளியை இப்போது http://www.ustream.tv/channel/dan-yarl-oli---europe என்ற இணையத்தளமுகவரியில் நேரடிஒளிபரப்பாக காணலாம்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG