அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 22 ஜூலை, 2011

வடக்கில் இன்னும் துணை இராணுவ செயற்பாடுகள்: அமெரிக்கா

லங்கையின் வடபகுதியில் செயற்படும் துணை இராணுவத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென அமெரிக்கா கூறியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளிலும் வேறு பல பிரச்சினைகள் தொடர்பிலும் முன்னேற்றம் காண நாமும் இந்தியாவும் ஒத்துழைத்து வருகின்றோம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனின் இந்திய விஜயத்தை முன்னிட்டு நடத்தப்படட் பத்திரிகையாளருடனான சந்திப்பின்போது அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார்.
வடக்கில் மாகாணசபை தேர்தலை நடத்தினால்தான் 30 வருடகாலமாக எல்.ரீ.ரீ.ஈ.யின் அதிகாரத்துக்குட்பட்டிருந்த அந்த பகுதியில் உள்ளூர் தலைமை தோன்ற வாய்ப்புக் கிடைக்கம் என அவர் கூறினார்.
அரசாங்கம், அப்பிரதேசத்தில் காணப்படும் துணை இராணுவ செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். இடப்பெயர்ந்தோரில் இன்னும் 10000 பேர் வரையிலேயே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் சாதனை நன்றாகவுள்ளது என அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG