அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 15 ஜூலை, 2011

18.6.2011 பி பி சி தமிழோசையில் எனது சிறு மடல்[ ஆடியோ இணைப்பு]

டந்த வாரம் 08 ஜூன், 2011 பி பி சி தமிழோசையில் 'இலங்கை மீது பொருளாதாரத் தடை என்ற' செவ்வியில் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்று, சிங்கள மக்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வழிவகைகள் காணப்படவேண்டும் என்று என்னும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அமையாரின் ஆழ்ந்த கரிசனை ஏற்புடையதுதான், ஆனால் இலங்கை மீது பொருளாதாரத் தடை ஏற்புடைய தீர்வாக அமையாது. அதுவே அவரின் அரசியல் நோக்கத்துக்காக என்றால் அது மீண்டும் இலங்கை தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதற்கு சமன் காரணம் 06 ஜுலை, 2010 அன்று பி பி சி தமிழோசையில் போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று ஜெயலலிதா கூறியிருந்ததையும், தடை செய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று சட்டப் பேரவையில் அவர் ஆட்சிக்காலத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டிய தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கை என்பதும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டபடவேண்டியது அவசியம் .ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் பொறுத்தவரையில் ஈழப் பிரச்சனை என்பது இருவருக்குமே ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் . இருவருமே ஆதாயம் கிடைக்கும் வரை அதை கோஷமாக வைப்பதும். ஆதாயம் கிடைத்து பதவிக்கு வந்த பின்னர் அதையே தொல்லையாகப் பார்ப்பதுமான போக்குமே இருவரிடமும் உள்ளது. இதனால் இலங்கை தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

0 கருத்துகள்:

BATTICALOA SONG