அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 10 ஜூன், 2011

யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் பதிவு அவசியமற்றது: கெஹெலிய

டக்கின் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் எனக்கு எந்தத் தவலும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போதைய நிலைமையில் அவ்வாறான பதிவு அவசியமற்றது என்றே நான் கருதுகின்றேன் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் மக்கள் பொலிஸ் பதிவை மேற்கொள்ளவேண்டும் என கிராம சேவகர்கள் ஊடாக அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும் ஏன் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் ஊடகவியலாளர்கள் வினவினர்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் வடக்கின் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் தற்போதைய நிலைமையில் இது அவசியமற்ற ஒன்று என்றே நான் கருதுகின்றேன். எனினும் இது தொடர்பில் நான் ஆராய்ந்துபார்த்துவிட்டு உங்களுக்கு கூறுகின்றேன். இந்த விடயம் குறித்த தகவல்களை நான் பெறவேண்டியுள்ளது. பெற்றதும் அறிவிக்கின்றேன் என்றார்.

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஐயா எப்படி நலமாக இருக்கிறீர்களா
உங்கள் வலைப்பூவை இணையப்பக்கத்தில் பார்க்கமுடிந்தது
சிறப்பான கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள்

உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய முறை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை அதனால்தான் இப்படி தொடர்புகொள்ளவேண்டியதாயிற்று
சரி மடலின் நோக்கத்திற்கு வருகிறேன்

நானும் வலைப்பூ ஒன்றை இலங்கையிலிருந்து எழுதிவருகிறேன்
முற்றுமுழுதும் கவிதையால் வார்த்திருக்கும் வலைப்பூ அது
நீங்கள் அதைப்பார்க்க வேண்டும் விமர்சனம் கூறவேண்டும்
எனக்கும் ஓர் தூண்டுகோலாக இருக்குமே
நன்றி
உங்கள் பதிலின் எதிர்பார்ப்புடன்

www.masteralamohamed.blogspot.com
sirajmohamed21@gmail.cxom

BATTICALOA SONG