அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 18 ஜூன், 2011

வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ராஜினாமா

வுனியா நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஜி.ரி. லிங்கநாதன், நகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அவர் கடந்த வவுனியா நகர சபைத் தேர்தலில் புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பாக போட்டியிட்டு தெரிவானார்.
தனது ராஜினாமா கடிதத்தினை நகர சபை செயலாளருக்கும், மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளருக்கும் அவர் அனுப்பியுள்ளார்

"வவுனியா நகர சபை ஆளும் தரப்பினரின் சீரற்ற நடவடிக்கையினால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது உள்ளது.
சேவையாற்றவே தேர்தலில் போட்டியிட்டு சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் மக்களுக்கு சேவையாற்ற முடியாமல் இருப்பதினால் நகரசபைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் பல கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது உள்ளது.
இதனால் தொடர்ந்தும் சபை உறுப்பினராக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற காரணத்தினால் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளேன்" என லிங்கநாதன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG