அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 16 ஜூன், 2011

இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

க்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் வியாழன் மாலை இலங்கை கொண்டு செல்லப்படுகின்றனர்.
இதில் சுமார் 40 தமிழர்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக இருந்தது. இவர்களில் ஒரு சிலரைத் தவிற மற்றவர்கள் கொழும்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது.

அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை மீண்டும் அங்கு அனுப்பப்படக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களோடு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து குரல் எழுப்பியிருந்தாலும், இது தொடர்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமல் ஒரு சிலரை திருப்பி அனுப்பும் நடவடிக்கை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.
இருந்தும் பெரும்பான்மையானோர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்கள். இந்த விடயம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு விவாதத்துக்கு தான் விடுத்த கோரிக்கையை, சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார் என்று மக்களவை உறுப்பினர் சியோபான் மெக் டோனா தமிழோசையிடம் தெரிவித்தார்.

திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஒரு சிலரின் பாதுகாப்புக்கு பங்கம் வரலாம் என்று, தான் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் இலங்கைக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து 30 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவரின் வழக்கறிஞர்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.

நாடு கடத்தப்படவிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் தனக்குத் தானே தீமை இழைத்துக் கொள்ள முயன்றதாகவும் அதன் பின் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும் உறுதி செய்துள்ள குடிவரவு அதிகாரிகள் தற்போது பிரயாணம் செய்ய ஏற்ற நிலையில் இருப்பதாக தமிழோசையிடம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய ராஜ்ஜியம் தனது சர்வதேசக் கடமைகளை மிகவும் முக்கியமாக எடுத்துக் கொள்வதாகவும், ஒரு நபர் தனக்கு சர்வதேச பாதுகாப்பு வேண்டும் என்பதை உணர்த்தினால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று குடியரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சென்றால் தமக்கு பாதிப்பு வரும் என்று தமிழோசையிடம் தெரிவித்த சில தஞ்சம் கோரிகள், அங்கு தமக்கு கருணா குழுவால் அச்சம் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அது போன்ற அச்சங்கள் தேவையற்றது என்று அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG