அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 30 ஜூன், 2011

பிரான்ஸ் அதிபர் சார்கோசி தாக்கப்பட்டார்: ஒருவர் கைது

பி ரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோசியை ஒருவர் தாக்கி, கீழே தள்ளினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோசி தெற்கு பிரான்சி்ல் உள்ள டொலுயீசில் மேயர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர் பிராக்ஸ் நகருக்கு சென்றார்.


அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு கூட்டத்தை தாண்டிச் செல்கையில் திடீர் என்று ஒருவர் சார்கோசியின் சட்டையைப் பிடித்து இழுத்தார். இதில் சார்கோசி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே அவர் சுதாரித்துக் கொண்டு எழுந்துவிட்டார். இதைப் பார்த்த காவலர்கள் சார்கோசியைத் தாக்கியவைரை கைது செய்தனர். அந்த நபர் ஏன் தாக்கினார் என்று உடனடியாகத் தெரியவில்லை.

0 கருத்துகள்:

BATTICALOA SONG