அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 20 ஜூன், 2011

புலிகளின் சொத்துக்கள், நிதிசேகரிப்பை முடக்குவதற்காக பல சட்டத் திருத்தங்கள்

மிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்குதல், நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சியாக நிதிப் பரிமாற்றச் சட்டம், பணச்சலவைச் சட்டம், பயங்ரவாத நிதியளிப்பு தடைச்சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது.


இந்த உத்தேச சட்டத் திருத்தங்கள் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாக தன்னை இனங்காட்ட விரும்பாத மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்தவுடன் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர்கூறினார்.

'பல வருடங்களுக்கு முன்னர் இச்சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது. சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. இப்போது சந்தேகத்திற்கிடமான, குறிப்பாக பயங்கரவாத குழுக்களினால் Nமுற்கொள்ளப்படும் பரிமாற்றங்கள் தொடர்பாக நாம் இன்னும் அதிக விடயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் இச்சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இதற்காக மத்தியவங்கி தேவையானவற்றைச் செய்துள்து. நாம் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறோம் என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG