அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 14 ஜூன், 2011

இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்: சங்கரி

ற்றையாட்சி முறையின் கீழான தீர்வினை ஏற்றுக் கொள்ள முடியாது. பலரின் ஆதரவினைப் பெற்றுள்ள இந்திய முறையிலான தீர்வுத் திட்டத்தை திருப்திகரமான தீர்வாக ஏற்கலாம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கு இராணுவ மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டும். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முன்பிருந்த முகாம்களில் இராணுவத்தை முடக்கி வைப்பதுடன் புதிதாக திறக்கப்பட்ட முகாம்கள் அகற்றப்படவேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் தலைவர் எஸ். ஸ்ரீதரன் சந்தித்து பேசினர்.
இச்சந்திப்பின்போது கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரியினால் மகஜர் கையளிக்கப்பட்டது. இந்த மாகஜரிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG