அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 21 ஜூன், 2011

நாம் எப்போதும் மக்களுடன் மக்களுக்காக சேவையாற்றி வருகின்றோம் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்)

நா ம் எப்போதும் மக்களுடன் மக்களுக்காக சேவையாற்றி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (18) யாழ் கொட்டடி சனசமூக நிலையத்தின் மூத்த பிரஜைகளின் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த முப்பது வருடங்களாக எமது மக்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் முடிவிற்கு வந்து ஒரு நிலையான சமாதானத்தை அனுபவித்து வரும் நிலையில் இவ்வாறான மூத்த பிரஜைகளின் கௌரவிப்பு என்பது முன்னுதாரணமானதொரு செயற்பாடாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உரையாற்றுகையில் இந்துக்கள் இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் என பல்லின சமூகத்தினரும் ஒற்றுமையான பிரதேசமாக இப்பிரதேசம் காணப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் நிலவும் பல்வேறுபட்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்கேற்ப ஆதனங்களின் வருமானம் அதிகரிக்கப்படும் போது அபிவிருத்திப் பணிகள் விருத்தி செய்யப்படும். பாழடைந்த வீதிகள் சிறு குறுக்கு வீதிகள் என்பன புனரமைப்புச் செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.

யாழ் கொட்டடி சனசமூக நிலையத்தினரால் எழுத்தாளர்கள் சமூகத் தொண்டர்கள் என மூத்த சமூகப் பிரஜைகளின் கௌரவிப்பு நிகழ்வில் மூத்த பிரஜைகளுக்கான சான்றிதழ்களை பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) அவர்களும் நினைவுப் பரிசில்களை யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களும் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி அலுவலர் கிராம அலுவலர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



















0 கருத்துகள்:

BATTICALOA SONG