அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 15 ஜூன், 2011

பூநகரிப் பகுதியில் நீர்வளங்கள் தொடர்பில் அமைச்சர் நடவடிக்கை

பூ நகரிப் பகுதியில் நிலத்தடி நீரில் உவப்பு நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்படி பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் அமைச்சர் அவர்களது கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு வரப்பட்டதையடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்விடயம் தொடர்பில் உரிய ஆய்வாளர்களைக் கொண்டு உடனடி ஆய்வுகளை மேற்கொண்டு இந்நிலையைத் தவிர்க்கும் வழிவகைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் முழங்காவில் பகுதியில் கடற்கரையை அண்டிய சில பகுதிகளில் நன்னீர் ஊற்றுக்கள் காணப்படுவதாக அமைச்சர் அவர்களது அவதானத்திற்கு பல்வேறு தரப்பினர் கொண்டு வந்திருந்தனர்.
பாதுகாப்புத் தரப்பினருடன் இவ்விடயம் குறித்து உறுதிப்படுத்திக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வகை ஊற்றுக்களிலிருந்து நீரைப் பெற்று இப்பகுதி மக்களது குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:

BATTICALOA SONG