அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 8 ஜூன், 2011

மின்னல் தாக்கி 31 பேர் உயிரிழப்பு

னவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப் பகுதியில் நாட்டின் பல பாகங்களில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி 31 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

மின்னல் தாக்கத்தினால் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். அம் மாதத்தில் மாத்திரம் 20 பேர் பலியாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, மின்னல் தாக்கத்தினால் ஜனவரி மாதம் 02, மார்ச் மாதம் 05, ஏப்ரல் மாதம் 20 பேரும், மே மாதம் 04 பேரும் என்ற அடிப்படையிலேயே 31 பேர் பலியாகியுள்ளனர். அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, இரத்தினபுரி உள்ளிட்ட கிராம பகுதியிலேயே இந்த மின்னல் தாக்கம் அதிகமாக இருந்தது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG