அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 3 மே, 2011

கனேடிய நாடாளுமன்றுக்கு இலங்கைப் பெண்மணி ராதிகா சிற்சபைஈசன் தெரிவு

\
னடாவில் நடைபெற்ற தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண்மணியான ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்றுள்ளார்.

இத் தேர்தலில் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் இவர் போட்டியிட்டார்.
இதேவேளை கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சி 70 ஆசனங்களை பெற்று இரண்டாவது கட்சியாக இம்முறை வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி கன்சர்வேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பெற்றது.

இதேநேரம் புதிய ஜனநாயகக் கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG