அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 28 மே, 2011

யாழ். உதயன் செய்தியாளர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

யாழ். உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை இனந்தெரியாத குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் சண்டிலிப்பாயை சேர்ந்த 37 வயதான எஸ்.கவிதரன் என்பவரே தாக்கப்பட்டவராவார்.
இவர் இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் வைத்து ஜந்து பேர் கொண்ட இனமந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
படுகாயடைந்த இவர், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG