அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 25 மே, 2011

யாழ்ப்பாணத்தில் தனக்குத் தானே தீ மூட்டி குடும்பப் பெண் தற்கொலை

யா ழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவர் குடும்பத் தகராறு காரணமாக தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு வத்திராயன் வடக்கு தாளையடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான நித்தியானந்தம் விமலாதேவி (வயது 56) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.
தீக்காயங்களுக்கு ஆளான இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.
இவரின் பிள்ளைகள் அனைவரும் வெளிநாடுகளில் வசிப்பதாகவும் அண்மையில் காணி ஒன்றை புதிதாக வாங்கி கணவருடன் வசித்துவந்த இவர் குடும்பத் தகராறினால் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG