அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 9 மே, 2011

முன்னாள் காதலனுடன் ஓடிவிட்டு கணவனிடம் கப்பம் கோரிய கர்ப்பிணி

பி ரசவத்திற்கு ஐந்தே நாட்கள் இருக்கும் நிலையில் தனது பழைய காதலனுடன் சென்ற ஒன்பது மாத கர்ப்பனி பெண் ஒருவர், தன்னை கடத்தி விட்டதாக கூறி தனது கணவனிடமே கப்பம் கோரிய சம்பவம் குறித்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


தனது பிரசவத்திற்கு ஐந்தே நாட்கள் இருக்கும் நிலையில் மனைவி கானாமற் போயுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அன்றிரவு மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று அவருக்கு வந்துள்ளது. தன்னை சிலர் கடத்தி வந்து ஒரு இலட்சம் ரூபாய் கப்பம் கேட்பதாகவும் அப்பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைப்பு செய்யுமாறும் அப்பெண் கோரியுள்ளார்.
கணவனுக்கு தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.
இத்தொலைபேசி அழைப்புகள் மூலம் விசாரணை நடாத்திய பொலிஸார் அவை நுவரெலியா பிரதேசத்திலிருந்து வருவதாக தெரிந்துகொண்டர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை மனைவி பொலிஸுக்கு வந்து தன்னை கடத்தி சென்றவர்கள் கண்டி நகரில் விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.
எனினும் தீவிர விசாரணைகளை நடத்திய பொலிஸார் உண்மைகளை கண்டறிந்துள்ளனர்.
குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ள போதும் இன்று அவருக்கு பிரசவ தினம் என்பதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரசவம் முடிவடைந்த பின் விசாரணைகள் தொடரும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக்க பண்டார தலைமையில் விசாரணைகள் நடைபெருகின்றன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG