அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 31 மே, 2011

'போர்க்குற்ற விசாரணைக்கு இடமில்லை'

போ ர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் விரைவிலேயே சந்திக்கமுடியும் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தியா வந்துள்ள ரணில் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இலங்கையிலுள்ள தமிழர்களின் மறுவாழ்வு குறித்து இந்திய அரசு அக்கறையுடனிருப்பது தனக்குத் தெரியும் என்றும், தானும் அது பற்றிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுவருவதாகவும் கூறினார்.

விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை தேவை என்ற கோரிக்கை குறித்துக் கேட்டபோது, இலங்கையர் எவரும் போர்க் குற்றத்திற்காக தண்டிக்கப்படாது என்பதில் இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றனர் என்றும் தவிரவும் போர்க்குற்றங்கள் விசாரிப்பது குறித்த உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திடவில்லை என்பதால் இலங்கை நிகழ்வுகள் குறித்து விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG