அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

மோசமான சூழ்நிலையிலும் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசத் தயார்: மாவை

மோ சமான சூழ்நிலையிலும் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஈழத்து காந்தி தந்தை செல்வாவின் 34ஆவது நினைவுத்தின நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது மோசமான சூழ்நிலை காணப்படுகின்றது. ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் இதுவைர முன்வைக்கவில்லை. இனப்பிரச்சினை தொடர்பில் நாங்களும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த தயாராகவுள்ளோம்.
இதேவேளை இலங்கையில் தமிழ் மக்கள் படும் துன்பங்களை கண்டு சரியான ஒரு அரசியல் தீர்வை பெற்றுத் தர இந்தியா உதவ வேண்டும். இதன் மூலம் சர்வதேச சமூகம் தமிழரின் விடுதலைக்கு உதவியாக இருக்கும்.
இன்று தமிழ் மக்கள் மனம் நொந்து கொடுமைகளை அனுபவித்த போதும் அவர்களுடைய இலட்சியங்கள் மாறவில்லை. எனினும் எல்லா மக்களும் ஒற்றுமையுடன் தங்களை தாங்களே ஆளும் அரசியல் தீர்வு கிட்டவேண்டும் என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG