அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 ஏப்ரல், 2011

ஸ்ரீரங்கத்தில் வடிவேலு கார் மீது செருப்பு வீச்சு: தேமுதிக கட்சி அலுவலகம் சூறை

திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவாணைக்கோவிலில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் சில நாட்களுக்கு முன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந் நிலையில் இந்தத் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு ஆதரவாக இன்று நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது வழக்கம்போல் விஜயகாந்த்தை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வடிவேலு கிளம்பியபோது அவரது கார் மீது இரண்டு செருப்புகள் வீசப்பட்டன.
அங்கிருந்த போலீசார் ஓடிச் சென்று செருப்பு வீசியவரைப் பிடித்தனர். அவரது பெயர் மாசிலாமணி என்றும், அவர் திருவாணைக்கோவில் பகுதி தேமுதிக துணைச் செயலாளர் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செருப்பு வீச்சைத் தொடர்ந்து ஆவேசமான திமுகவினர் அப்பகுதி தேமுதிக அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG