அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 23 ஏப்ரல், 2011

பான் கீ மூனுக்கும் அவரது சகாக்களுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்: குணதாச

பா ன் கீ மூனின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை விடயத்தில் அரசாங்கம் மண்டியிடாத தன்மையை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக நிபுணர் குழு தொடர்பாக ஆராயும் இலங்கை குழுவின் உறுப்பினர்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றுள்ளதாக கூறி பான் கீ மூன் போலியான அறிக்கையொன்றை தனது நிபுணர் குழு ஊடாக வெளியிட்டுள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ளவோ பதிலளிக்கவோ முற்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளே தோன்றும். முறைகேடாக இலங்கைக்கு எதிராக போர்க் குற்ற அறிக்கை வெளியிட்டமைக்கு பான் கீ மூனுக்கும் அவரது சகாக்களுக்கும் சரியான பாடம் புகட்டப்பட வேண்டும்.
இதற்காக இலங்கை அரசாங்கம் விசேட குழுவொன்றை அமைக்குமானால் அக்குழு உறுப்பினர்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் ஐ.நா.வின் விசாரணைகளுக்கு உதவி செய்வதாக அது அமைந்துவிடும் என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG