அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

ஒரு சூப்பர் இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா

ந்தியக் கேப்டன் டோணி ஒரு சூப்பர் ஹிட் சினிமா இயக்குநர் மாதிரி, தனக்கு தேவையான வீரர்களை, எந்த ரோலுக்கு யார் பொருந்துவார்கள் என்று பார்த்துப் பார்த்து தேர்வு செய்து ஆட வைத்து அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளார், என்றார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா.

டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்று 28 ஆண்டுகால கனவை நனவாக்கியது. உலக கோப்பையை வென்றதை தொடர்ந்து கேப்டன் டோனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதில் சமீபத்தில் பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா பாராட்டு வித்தியாசமாக அமைந்தது.
அவர் கூறுகையில், "உலககோப்பையை இந்தியா வெல்ல டோணியிந் தலைமைதான் காரணம். வீரர்கள் தேர்வு செய்வதில் அவர் கையாண்ட விதம் சிறப்பானது.
ஒரு சூப்பர் ஹிட் சினிமா படத்துக்கு ஏற்ற நட்சத்திரங்களை இயக்குநர் தேர்வு செய்வதைப் போலவே டோணியும் வீரர்களை தேர்வு செய்துள்ளார். வீரர்கள் தேர்வில் அவர் எடுத்த துணிச்சலான முடிவுதான் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது.
அஸ்வினுக்கு 2 ஆட்டத்தில் வாய்ப்பு கொடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதியில் அவருக்கு பதிலாக நெஹ்ரா சேர்க்கப்பட்டார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நெஹ்ரா மோசமாக பந்து வீசியதால் அவரது தேர்வை விமர்சனம் செய்தார்கள். ஆடுகளம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அவர் துணிச்சலாக நெக்ராவை தேர்வு செய்தார்.
அதற்கு ஏற்றவாறு அவரும் சிறப்பாக வீசினார். இதே போல யூசுப் பதான் லீக் ஆட்டங்களில் சரியாக ஆடாததால் ரெய்னாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் தனது முடிவுப் படி வீரர்களை தேர்வு செய்கிறார்.
அதேபோல வீரர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதமும் சிறப்பாக இருக்கிறது. டெண்டுல்கர், ஷேவாக்கிடம் அவர் தனது எல்லையை தாண்டிப் பேசுவதில்லை. இதுதான் அவர் மீது எல்லோருக்கும் புதிய மரியாதையை வரவழைத்துள்ளது," என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG