அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

அரசாங்கத்தின் கண்டனம் குறித்து கவலையில்லை: சுரேஷ்

றுதிக் கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளும் பயங்கரவாதமும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறிக்கொண்டு இருக்கின்றதே தவிர அதன் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, காணாமல்போனமை தொடர்பில் வாய்திறப்பதாக தெரியவில்லை.

இதனையே ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையும் வலியுறுத்தியிருக்கின்றது. எனவே, அந்த அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் அரசாங்கம் கவலை வெளியிட்டிருப்பது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர்ந்த வேறு எந்த தமிழ்க் கட்சியினையும் வடக்கு கிழக்கு மக்கள் அங்கீகரித்திருக்கவில்லை. தேசிய இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான அதிகாரத்தையும் ஆணையையும் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வழங்கியிருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்ல என்றும் கூட்டமைப்பு ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருப்பது தொடர்பில் அரசு கவலையடைவதாகவும் அமைச்சர் கெஹலியறம்புக்கெல தெரிவித்திருந்தமை தொடர்பில் “கேட்டபோதே சுரேஷ் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

வடக்கு கிழக்கை சேர்ந்த ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்திருக்கின்றனர். அதன் பிரதிபலனாகவே பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களையும் தெரிவித்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள தேசிய இனப்பிரச்சினை விவகாரம் அதிலுள்ளடங்கியுள்ள அரசியல் தீர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான சகல உரிமைகளையும் எமக்கு வழங்கியுள்ளனர்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல்களிலும் வடக்கு கிழக்கு மக்களின் நிலைப்பாடு வெளியிட்பட்டிருந்தது. எனவே, தமிழ் மககளின் ஏகப்பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே திகழ்கின்றது. இதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. இந்நிலையில் ஏகப்பிரதிநிதி என்ற விடயத்தை கேள்விக்கு உட்படுத்திக்கொண்டிருப்பதில் அர்த்தம் கிடையாது. தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் அன்றாட பிரச்சினைகள், அரசியல் கலாசார விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தொடர்ந்தும் குரல் எழுப்பிவருகின்றது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எவருக்கும் சந்தேகம் எழுத்தேவையில்லை,.
இது இவ்வாறிருக்க ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை மீதான அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்தமை சம்பந்தமாக அரசாங்கம் கவலை வெளியிட்டிருக்கலாம் அது பற்றி எமக்கு பிரசசினை கிடையாது. ஏனெனில் இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காணாமல்போயுள்ளனர். இந்த விடயங்களை ஆராயுமாறும் அது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறுமே ஐ.நா. அறிக்கை வலியுறுத்தி நிற்கின்றது.மாறாக புலிகளின் இயக்கம் அழிக்கப்பட்டதையோ அல்லது பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட்டதையோ கேட்டிருக்கவில்லை. ஆனாலும், அரசாங்கமோ பயங்க்ரவாதம் ஒழிக்கப்படடதாகவும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாகவுமே கூறிக்கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் கொல்லப்பட்ட , காணாமல்போன அப்பாவி தமிழ் மக்களின் விபரங்களை வெளியிடுவதற்கு இதுவரையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இங்குள்ள பிரச்சினையாவது அழிக்கப்பட்ட, காணாமல்போன தமிழ் மக்கள் தொடர்பானதே தவிர பயங்கரவாதம் சம்பந்தமானது அல்ல.
யாவரும் இலங்கையர் என அரசாங்கம் நினைக்குமானால் தமிழ் மக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும், கவலையடையவும் வேண்டும். இவ்வாறு நிகழுமானால் இலங்கை அரசாங்கமானது உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதற்கான தீர்வுகளையும் வழங்கும். ஆனால்,“ அரசாங்கத்திடம் அவ்வாறனதொரு நிலைமையை காணமுடியவில்லை. உண்மையாக கூறுவதாயின் தமிழ் மக்கள் மீதான கரிசனை அரசாங்கத்திடம் இல்லை என்பதேயாகும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG