அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

மன உளைச்சலால் விரலை வெட்டி சமைத்து சாப்பிட்ட நியூசிலாந்து வாலிபர்

னஉளைச்சலால் அவதிப்படும் நியூசிலாந்து வாலிபர் தனது விரலை வெட்டி, காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து உண்டுள்ளார் என்று ஆஸ்திரேலிய மனோதத்துவ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் 28 வயது டேனியல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கடந்த சில வருடங்களாகவே மனஉளைச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சமைக்கும்போது காய்கறிகளுடன் சேர்த்து தனது விரல் ஒன்றையும் வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளார். அவர் இந்த கொடூர செயலை செய்கையில் மதுவோ, போதைப்பொருளோ உட்கொள்ளவில்லை என்று மனோதத்துவ நிபுணர்கள் எரிக் மானஸ்டீரியோ மற்றும் கிரெய்க் பிரின்ஸ் தெரிவித்தனர்.

உலகில் இதுபோன்று இதுவரை 8 சம்பவங்கள் நடந்துள்ளன என்று அவர்கள் கூறினார்கள்.

டேனியல் இன்னும் 2 விரல்களை சமைத்து உண்ணத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவ்வாறு செய்யவில்லை.
டேனியல் மனஉளைச்சலால் தூக்கமின்றியும், தற்கொலை சிந்தனைகளுடனும் இருந்துள்ளார். அடுத்தவர்களை காயப்படுத்த விரும்பாத அவர் தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டுள்ளார் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG