அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 28 ஏப்ரல், 2011

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு : அமைச்சர் கெஹலிய

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இவ்வறிக்கை சட்ட ரீதியானது அல்ல, இது ஒரு தலைப்பட்சமாக வெளியிடப்பட்ட அறிக்கையாகும். இதனை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
அறிக்கையை உருவாக்க ஐ.நா. செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் அதனை தயாரிப்பதற்கோ வெளியிடவோ சட்ட ரீதியான மற்றும் ஒழுக்க ரீதியான உரிமை கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG