அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

ஹீரோ வடிவேலு... காமெடியன் விஜயகாந்த்! - ஸ்டாலின் விளாசல்

சி சினிமாவில் காமெடியனாக வந்த வடிவேலு இன்று கதாநாயகனாகிவிட்டார்... ஆனால் ஹீரோவாக வந்த விஜயகாந்த் இப்போது காமெடியனாகிவிட்டார், என்றார் துணை முதல்வர் முக ஸ்டாலின்.

கும்மிடிப்பூண்டி தொகுதியின் பா.ம.க. வேட்பாளரான கே.என்.சேகரை ஆதரித்து பெரியப்பாளையத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
எப்படிப்பட்ட நிலையிலும் மக்களோடு இருந்து பணியாற்றக் கூடியவர்கள் நாங்கள். ஜெயலலிதாவை பொறுத்த வரை தேர்தல் வந்தால் மட்டும் தமிழ்நாடு, இல்லா விட்டால் கொடநாடு. இதைச் செய்வோம், அதை செய்வோம் என அவர்களுக்கு தெரிந்ததை தேர்தல் வாக்குறுதிகளாக கூறுவார்கள்.
எதையெல்லாம் செய்ய முடியாதோ, அதையெல்லாம் கூறி வானத்தை கிழிப்போம். வைகுண்டத்தை காட்டுவோம், மணலை கயிறாக திரிப்போம் என்று வாக்குறுதிகளை கொடுப்பார்கள்.
இப்போது அவருக்கு ஜோடியாக ஒரு புதுத் தலைவர். அருமையான தலைவர். நிதானமாக பேசக் கூடியத் தலைவர். சினிமாவில் கதாநாயகனாக நடித்தவர், அரசியலில் வில்லனாக வந்தவர். இப்போது காமெடி யனாக மாறி உள்ளார்.
ஆனால் சினிமாவில் காமெடியனாக வந்த வடிவேலு இன்று காதாநாயனாகி விட்டார். விஜயகாந்த் அடிக்கிறார். இல்லையென்றால் குடிக்கிறார். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்கும் அணியாக அ.தி.மு.க கூட்டணி இருந்து வருகிறது. தலைவர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் ஜெயலலிதா, இது ஒரு குடும்ப ஆட்சி என்கிறார்.
ஆமாம், இது குடும்ப ஆட்சிதான். இன்றைக்கு கோடிக்காணக்கான குடும்பங்களை பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் வாழவைத்துக் கொண்டிருக்கிற வகையில் அந்த குடும்பங்களுக்கான குடும்ப ஆட்சிதான்.
நாங்கள் ஜனநாயக முறைப்படி தேர்தலை அணுகுகிறோம். இந்த 5 ஆண்டு கால ஆட்சி பொறுப்பில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய உரிமையில் ஓட்டு கேட்கிறோம்.
அந்த வகையில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள் மீண்டும் தொடரவும், புதிய திட்டங்களை நிறை வேற்றிடவும் மறவாமல் கே.என்.சேகருக்கு மாம்பழச் சின்னத்தில் வாக்களித்து 6-வது முறையாக தலைவர் கருணாநிதியை முதல்வராக ஆக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

3 கருத்துகள்:

goma சொன்னது…

மூதேவி,லூசு,போன்ற தரங்கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசி பிரசாரம் செய்யும், ஹீரோவுக்கான வசனத்தை எழுதுவது யார்?கலைஞரா?

Unknown சொன்னது…

@goma

Unknown சொன்னது…

@gomaஇருக்கலாம் நண்பா நான் இல்லை

BATTICALOA SONG