அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு ஆதரவு

மெரிக்க நாடாளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் அமெரிக்க - இலங்கை உறவு வலிமையடைவதற்கு உதவ வேண்டுமென தமது நாடாளுமன்ற சகாக்களை வலியுறுத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அடைந்த முன்னேற்றத்தை கருத்திற் கொள்ளுமாறு கிறிஸ் ஹொலன், ரொபர்ட் அடேர்ஹோல்ட் ஆகிய இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சாகாக்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி எழுதியுள்ள கடிதமொன்றில் கோரியுள்ளனர். இவ்விருவரும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இலங்கை விவகாரக் குழுவின் இணைத் தலைவர்களாவர்.
'இலங்கை ஒரு பல்கட்சி பல்லின ஜனநாயகமாகும். தமிழ் புலிகளுடனான நீண்டகால யுத்தத்திலிருந்து அது அண்மையில் மீண்டுவந்துள்ளது. 30 வருடகால உள்நாட்டு மோதலினால் ஏற்பட்ட உணர்வுபூர்மான காயங்ககளைக் குணப்படுவத்தில் தனது சக்தியை குவித்து வருகிறது ' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG