அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 21 ஏப்ரல், 2011

நாட்டுக்கே முதலிடம் : தில்ஷான்

ஐ. பி.எல். போட்டிகளைவிட நாட்டிற்காக விளையாடுவது முக்கியமானது எனவும் தற்போது ஐ.பி.எல். போட்டிளில் பங்குபற்றும் இலங்கை வீரர்கள் மே 5 ஆம் திகதி திரும்பி வருவார்கள் எனவும் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுலாவுக்கான பயிற்சிகளுக்காக மே 5 ஆம் திகதி ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்கள் திரும்பிவர வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை குறைந்தபட்சம் மே 15 ஆம் திகதிவரையாவது இலங்கை வீரர்களை ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அனுமதிகுமாறு இந்திய கிரிக்கெட் சபை விடுத்த கோரிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் சபையும் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG