அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

சோனியாவின் கருத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது: யாப்பா

லங்கை விவகாரம் தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து ஆராயும் என்பதுடன் உரிய பதிலை வழங்கும் என்று பதில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
சர்வதேசமட்டத்தில் சில தரப்பினர் கூறுவது போன்று இலங்கையில் எந்தவிதமான மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லை. அதாவது சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் எந்த உரிமை மீறலும் இடம்பெறவில்லை. அத்துடன் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கின் கூற்றுக் குறித்தும் வெளிவிவகார அமைச்சு உரிய பதிலளிக்கும்.
எமது சட்டத்துக்கு உட்பட்டு நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத்தை தோற்கடித்து மக்களுக்கு புதிய சுதந்திரத்தையும் சமாதானத்தையும் நிம்மதியையும் பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கல்நதுகொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG