அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 ஏப்ரல், 2011

பனை மற்றும் கித்துள் சார்ந்த உணவு உற்பத்திகளை நவீன மயப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் தலைமையில் ஆராய்வு

பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் பனை மற்றும் கித்துள் சார்ந்த உணவு உற்பத்திகளை நவீன மயப்படுத்துவது மற்றும் சந்தைப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பனை மரத்திலிருந்தான பனம்பழம் மற்றும் கிழங்கு ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பயன்கள் உள்ளிட்ட பயன்பாடுகளை நவீனத்துவம் மூலமும் தொழில்நுட்ப ரீதியாகவும் மென்மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இதேபோன்று கித்துள் சார்ந்த உணவு உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் இரண்டினதும் உற்பத்திகளை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தல் உற்பத்திகளை மருத்துவ ரீதியாக ஆராய்ந்து அதன் மூலம் மருத்துவப் பயன்களை பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்திலும் உற்பத்திகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன் கித்துள் சார்ந்த உற்பத்திகளை பனை அபிவிருத்திச் சபையுடன் இணைந்தும் யாழ்ப்பாணம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் துறைசார்ந்த நிபுணர்களின் அறிவுரை ஆலோசனைக்கமைய மேற்கொள்ள வேண்டும் எனவும் இம்மாத இறுதிக்குள் ஆராய்ச்சி மற்றும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட துறைசார்ந்த இரு தொழில்த்துறைகளின் வேலைத்திட்டங்கள் நம்பிக்கையுடனும் எதிர்காலத் திட்டத்துடனும் முன்கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

தேசிய இயந்திரவியல் ஆராய்ச்சி நிறுவனம் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் யாழ் பல்கலைக்கழக உயிரியல் இரசாயனத்துறை விரிவுரையாளர் கலாநிதி பாலகுமாரன் பேராதனை பல்கலைக்கழக உணவு தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் கலாநிதி ஜெயக்கொடி பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் உள்ளிட்டோருடன் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.










0 கருத்துகள்:

BATTICALOA SONG