அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 3 மார்ச், 2011

அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கையும் பழிவாங்கும் கலாசாரமும் மக்களை வதைக்கின்றது

ரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையும் பழிவாங்கும் அரசியல் கலாசாரமும் நாட்டு மக்களை வாட்டி வதைக்கின்றன. ஒருவேளை உணவிற்கு பொதுமக்கள் திண்டாடும் போது ஒரு இலட்சம் ரூபா வீட்டு வாடகையை அமைச்சர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள் என்று ஜே. வி. பி. குற்றம்சாட்டியுள்ளது.

வெள்ளையர்கள் சுகம் காண்பதற்கு தலைநகர் கொழும்பையும் வடக்கு கிழக்கையும் சூதாட்ட பூமியாக அரசாங்கம் மாற்றி வருகின்றது. இதன் முதற்கட்டமாக கொழும்பு 10, டாக்டர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள அரச மற்றும் தனியார் சொத்துக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் அதனை "கெசினோ' சூதாட்ட பூமியாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரமும் கோரப்பட்டுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே. வி. பியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அக்கட்சியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறுகையில்,
நாட்டு மக்களால் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் அரசாங்கம் மக்களின் துன்பங்களை பாராது, பழமைவாய்ந்த பொருளாதார கொள்கையை பிடித்துக் கொண்டு நாட்டை இழுத்துச் செல்கின்றது. 1978 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மரணித்து விட்டது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG