அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 8 மார்ச், 2011

துப்பாக்கி சூட்டில் யாழ். மாணவன் படுகாயம்

யாழ். தொண்டமனாறு, செல்வச் சந்நிதி ஆலய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாடசாலை மாணவன் படுகாயம் அடைந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இந்த மாணவனும் படைச் சிப்பாய் ஒருவரும் துப்பாக்கியைப் பிடித்தவாறு இழுபறியில் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இதுவரையில் அறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன் வீதியில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேசவாசிகள் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் பொலிஸிலும் முறையிட்டதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG