அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 மார்ச், 2011

நாளை வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜெ.

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை திருச்சியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து தனது சூறாவளி பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இதற்கன வேட்பு மனுவை அவர் நாளை தாக்கல் செய்கிறார்.
இதற்காக நாளை காலை 11 மணி முதல் 1 மணிக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். திருச்சியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து ஜெயலலிதா மனு தாக்கல் செய்கிறார்.
காலை 10 மணிக்கு திருச்சி வரும் ஜெயலலிதா சங்கம் ஹோட்டலில் தங்குகிறார். பின்னர் மனு தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜெயலலிதா.
தொடர்நது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் செய்யும் ஜெயலலிதா, ஏப்ரல் 11ம் தேதி சென்னையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
ஜெயலலிதாவின் பிரசாரத்திற்காக 3 நவீன வசதிகள் கொண்ட வாகனங்கள் தயாராக உள்ளன.


0 கருத்துகள்:

BATTICALOA SONG