அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 17 மார்ச், 2011

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அதிமுக சமரச முயற்சி

மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக சமரசப் பேச்சு நடத்தி வருகிறது.
ஜெயலலிதாவின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பால், அவரது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுமே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன
.தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை முதல் தனது கட்சியினரோடு அவசர ஆலோசனையில் இறங்கியுள்ளார். அதேபோல பார்வர்ட் பிளாக் தலைவர் பா.கதிரவன், மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன், பார்வர்ட் பிளாக் தலைவர் கதிரவன் ஆகியோர் விரைந்தனர்.
அங்கு வைத்து நான்கு தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இவர்கள் அனைவரும் தேமுதிக அலுவலகத்துக்குச் சென்று விஜய்காந்துடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை 6 கட்சித் தலைவர்களும் மீண்டும் சந்தித்துப் பேசலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. அதிமுக தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் 6 கட்சிகளும் கூட்டணியில் இருந்து பிரிந்து வந்து தனி அணியாக போட்டியிடலாம் என்று தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜயகாந்த்தை சந்தித்து விட்டு வெளியே வந்த தா.பாண்டியனிடம், மீண்டும் அதிமுகவுடன் சமரசம் ஏற்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, சமரசத்துக்கு இடமில்லை என்றவர் தொடர்ந்து பேசுகையில்,
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொடர்ந்து பேசுவோம். மத்திய-மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையை முறியடிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதே நேரத்தில் கூட்டணியில் எழுந்துள்ள குழப்பம் குறித்து, அதிமுக தலைமையிடம் பேச திட்டமிட்டுள்ளோம். மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கவில்லை, குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.
கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக மீண்டும் ஜெயலலிதாவைச் சந்திப்போம், விரைவில் தங்கள் கூட்டணிக்குள் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அதிமுக சமரச பேச்சு:

இதற்கிடையே இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களிடமும் அதிமுக இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் இன்று சமரசப் பேச்சு நடத்தினர். கம்யூனிஸ்ட்கள் விரும்பும் தொகுதிகள் அவர்களுக்கு அளிக்கப்படும் என இருவரும் உறுதியளித்ததாகத் தெரிகிறது.
சமரசம் ஏற்படாமல் 3வது அணி அமைந்தால் அதில் மதிமுக மற்றும் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும், பூவை ஜெகன் மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கடசியும் இணையுள்ளன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG