அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 மார்ச், 2011

குத்தகைக்கு குட்டித் தீவுகள்

லங்கையின் வடமேற்குக் கரையோரமாக புத்தளம் மாவட்டம் கற்பிட்டிப் பகுதியில் இரு தீவுகளை வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட சுற்றுலா நிருவனங்களுக்கு 30 வருட குத்தகைக்கு விட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெள்ளைத்தீவு மற்றும் இன்பத்தீவு ஆகியன இலங்கை, சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தளமாகக் கொண்ட சுற்றுலா நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த இலங்கை பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சரான லக்ஷ்மன் யாப்ப அபயவர்த்தன அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த தீவுகள் தம்மால் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகின்ற அப்பகுதி மீனவர்கள், இவ்வாறு தனியாருக்கு குத்தகைக்கு விடுவத்டு தமது வாழ்வியலைப் பாதிக்கும் என்று கூறுகின்றனர்.
இது தொடர்பாக தமிழோசையுடன் பேசிய தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் கற்பிட்டிப் பிராந்திய இணைப்பாளரான ஜே. பத்மநாதன், சுமார் 600 மீனவ குடும்பங்கள் வரை இந்தத் திட்டத்தினால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கூறுகிறார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG