அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 27 மார்ச், 2011

யாழ். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயற்சி: ஹத்துருசிங்க

யாழ்ப்பாணத்திலுள்ள மக்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

யாழில் தொடரும் இராணுவ பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை மேற்படி அரசியல்வாதிகள் முன்வைத்து வருவதால் மக்கிளிடையே மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் யாழ். மக்களுக்கு இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கை உள்ளது என்றும் அதனால் அவர்களும் இராணுவத்தினரும் நல்லுறவைப் பேணி வருவதாகவும் கட்டளைத் தளபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் சில அரசியல் தலையீடுகளே தொடர்புபட்டுள்ளன என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குற்றவாளிகளை வெகு விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG