லி பிய தலைநகர் திரிபோலியிலுள்ள லிபியத் தலைவர் கேணல் முவம்மர் கடாபியின் வளாகக் கட்டடம் மீது மேற்குலக நாடுகளினால் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கேணல் முவம்மர் கடாபியின் வளாகக் கட்டடத்தை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை மேற்குலகு கூட்டுப்படை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கேணல் கடாபியை தாம் இலக்கு வைக்கவில்லை எனவும் அவரின் பாதுகாப்பு படையினரும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளுமே இலக்கு வைக்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரியொருவர் கூறினார்.
ஐ.நா.வின் தீர்மானத்தின்படி லிபியா மீது விதிக்கப்பட்ட விமானப் பறப்பு தடை வலயத்தை உறுதிப்படுத்தும் முகமாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக