அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 1 மார்ச், 2011

நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமுல்படுத்துவதில் சிக்கலா? : நீதிபதிகள் கேள்வி

வெள்ளைக்கொடி விவகார வழக்கின் போது நீதிமன்றத்தின் உத்தரவுகள் ஏன்? அமுல்படுத்தப்படுவதில்லை. உத்தரவுகளை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல்கள் இருக்கின்றனவா? என நீதிபதிகள் குழு சிறைச்சாலை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது.
வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.
வெள்ளைக்கொடி விவகார வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்றது.
வழக்கின் நேற்றைய விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த பிரதிவாதியின் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற உத்தரவுகள் சிறைச்சாலை அதிகாரிகளினால் அமுல்படுத்தப்படுவதில்லை என்று நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
சிறைச்சாலை அதிகாரியை மன்றுக்கு அழைத்த பிரதம நீதிபதி தீபாலி விஜயசுந்தர நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல்கள் இருக்கின்றனவா? என வினவினார். மன்றுக்குள் ஆஜராகியிருந்த சிறைச்சாலைகள் அதிகாரி நீதிமன்ற உத்தரவுகளுக்காக அனுமதி சிறைச்சாலை தலைமையகத்திடமிருந்து தங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதி தேவையில்லை உத்தரவுகளை உடனடியாக அமுல்படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் குழு மேற்படி வழக்கின் அடுத்த விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சகல உத்தரவுகளும் அமுல்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணித்தது.
இதனையடுத்து வெள்ளைக்கொடி விவகார வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

0 கருத்துகள்:

BATTICALOA SONG