அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 28 மார்ச், 2011

பெண்களுக்கு ஜெயலலிதாதான் எதிரி: மு.க.ஸ்டானின் தாக்கு

முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தை நிறுத்திய பெருமை ஜெயலலிதாவைச் சேரும். பெண்ணாக இருந்தபோதிலும் பெண்கள் படுமாபாடு பற்றி தெரியாதவர் தான் ஜெயலலிதா என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு மலர் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று காலை நடந்தது. இந்த விழாவுக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தலைமை தாங்கினார். மக்கள் பாதுகாப்புக்கழக நிறுவன தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பு மலர் தொகுப்பினை வெளியிட்டார். முதல் பிரதியை தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுப.இளவரசன் பெற்றுக்கொண்டார்.

அப்போது துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் நான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். இங்கு திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களைப் பார்க்கையில் அவர்கள் அதிகளவு விழிப்புணர்வு அடைந்துள்ளனர் என்று தெரிகிறது.
தந்தை பெரியார் கடந்த 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில்தான், பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். அவரது தீர்மானத்தை 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989-ம் ஆண்டில் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றினார். பெண்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கியதும் முதல்வர் கருணாநிதிதான்.
கடந்த 1989-ம் ஆண்டு ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகைக்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருமண உதவி திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் துவக்கத்தில் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கபப்ட்டது. 1991-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த திட்டத்தையே நிறுத்திவிட்டார்.
1996-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் கருணாநிதி திருமண நிதி உதவியை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார். பின்னர், 2001-ம் ஆண்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். பெண்களின் கஷ்டங்களைப் பற்றி தெரியாத ஜெயலலிதா மீண்டும் திருமண உதவித்தொகை திட்டத்தை மீண்டும் நிறுத்தினார்.
2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. திருமண உதவித்தொகையை ரூ.10 ஆயிரத்தில் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். பின்னர் 6 மாதத்தில் ரூ.20 ஆயிரமாகவும், அடுத்த 6 மாதத்தில் ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கினார். தற்போது வெளியிட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கையில் அந்த தொகையை ரூ. 30 ஆயிரமாக உயர்த்தியுள்ளார்.
கடந்த 1989-ம் ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுவை கருணாநிதி தொடங்கினார். தமிழக மகளிர் சுய உதவிக்குழுவினர் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளனர். இப்படி பெண்களுக்காக, பெண்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக முதல்வர் கருணாநிதி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளார். இதை எல்லாம் தாய்மார்களும், பெண்களும் உணர்ந்து கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG