அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 30 மார்ச், 2011

விஜய் ஆதரவு மட்டும்தான்; அதிமுகவுக்கு பிரச்சாரம் இல்லை!-எஸ்ஏ சந்திரசேகரன்

ந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார் விஜய். ஆனால் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவாரா என்று தெரியவில்லை என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்தார்.

நடிகர் விஜயின் தந்தையும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளருமான ஏ.எஸ்.சந்திரசேகரன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது தனது அதிமுக ஆதரவு குறித்து அவர் கூறுகையில், "மக்கள் இயக்கம் ஒரு அரசியல் இயக்கம் அல்ல. நானும், என் மகன் விஜயும் அரசியல்வாதிகள் அல்ல. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சினிமா கலைஞர்களாகவே இருக்க விரும்புகிறோம்.

ஜனநாயக நாட்டில் எல்லா தரப்பு மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கு தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். இது தான் எங்கள் இயக்கத்தின் லட்சியம். இதற்காக அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளித்து இருக்கிறோம்.

அ.தி.மு.க.விற்கு ஆதரவளிப்பது என்ற முடிவை நானோ, விஜயோ தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை. நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்துப்படி கேட்டுத்தான் இந்த முடிவை எடுத்தோம்.

நடிகர் விஜய் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்வாரா என்று கேட்கிறார்கள். விஜய் தலைமையிலான மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வை ஆதரிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரசாரம் செய்ய இருக்கிறேன். விஜய் எப்போது, எப்படி பிரசாரம் செய்வார் என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை அவர்தான் சொல்ல வேண்டும். இப்போது ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அவர். பிரச்சாரம் சாத்தியமா என்று தெரியவில்லை.

சேலம் மாவட்டத்தில் ரசிகர்கள் சிலர் விஜய்யின் அதிமுக ஆதரவு நிலையை எதிர்த்து மன்ற உறுப்பினர் கார்டுகளை எரித்ததாகக் கூறப்படுவது தவறு. வேண்டுமென்றே உறுப்பினர் இல்லாதவர்களை அழைத்து இது போன்று செய்திருக்கிறார்கள்", என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG