அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 3 மார்ச், 2011

நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களுக்கான நிதியுதவி!

தர் சிறிலங்கா 2010 தேசிய மட்ட நிகழ்வில் பங்கெடுத்த யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் முகமாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாணவர்களது பிரயாணம் உணவு மற்றும் தங்குமிடம் என்பற்றுக்கான செலவிற்கென நிதியுதவியினை வழங்கினார். (படம் இணைக்கப்பட்டுள்ளது)
கடந்த ஆண்டு ஆனி மாதம் கொழும்பில் நடைபெற்ற மதர் சிறீலங்கா 2010 நிகழ்வில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

நான் மாறினால் நாடு மாறும் என்ற தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்பட்ட ஆற்றுகை நிகழ்வில் குறிப்பிட்ட பாடசாலை மாணவர்கள் மாகாண மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் தேசிய ரீதியில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்விலும் பங்கெடுத்தினர்.

கடந்த ஆண்டு 6ம் மாதம் அலரிமாளிகையில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன் மதர் சிறீலங்கா 2010 நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வடபகுதியிலிருந்து தென்பகுதிக்குச் சென்ற பாடசாலை சமூகத்தினரின் பிரயாணம் உணவு மற்றும் தங்குமிடம் என்பற்றுக்கான செலவுக்கான 50 ஆயிரம் ரூபா நிதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று வழங்கினார்.



0 கருத்துகள்:

BATTICALOA SONG