அதிமுகவுடனான பேச்சுவார்த்தைகளில் கண்ணியத்தைக் கடைப்பிடித்து வருகிறது மதிமுக. எனவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான போராட்டங்களை மதிமுகவினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மதிமுக கண்ணியத்தைக் கடைப்பிடித்து வருகிறது.
லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்து, மதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், தாம்பரம், தேனி போன்ற இடங்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான போராட்டங்கள், கொடும்பாவி, கொடிகள் எரிப்பு போன்றவை நடந்திருப்பது கண்டனத்துக்குரியது.
மதி்முகவினர் உடனடியாக இதுபோன்ற போராட்டங்களை நிறுத்தி விட்டு கண்ணியம் காக்க வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக இன்று காலை மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இருந்த தேமுதிக-இடதுசாரிகள் தரப்பிலிருந்து தனக்கு அழைப்பு வரலாம் என்ற நிலையில், தனது வெளியூர் நிகழ்ச்சிகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு சென்னையிலேயே முகாமிட்டிருந்தார் வைகோ.
இன்று நெல்லையில் நடக்கயிருந்த தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்துக்குச் செல்வதையும் வைகோ தவிர்த்துவிட்டார்.
அதிமுகவுடன் சமரசம் ஏற்படாவிட்டால் வைகோவை இந்தக் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம் என்ற நிலையில் திடீரென சமாதான முயற்சிகள் ஆரம்பமானதால் வைகோவை இந்தக் கட்சிகள் அழைக்கவில்லை.
அதே நேரத்தில் மதிமுக தரப்புடனும் அதிமுக தனது ரகசிய பேச்சுக்களை ஆரம்பித்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக