அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 29 மார்ச், 2011

ஸ்ரீ சத்ய சாய் பாபா வைத்தியசாலையில்

லகப் புகழ்பெற்ற ஆன்மீக தலைவரான ஸ்ரீ சத்ய சாய் பாபா உடல் நலக் குறைவு காரணமாக நேற்று திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 86 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய ஸ்ரீ சத்ய சாய் பாபா சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நிலையில் புட்டபர்த்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டள்ளதாகவும் நுரையீரலுக்குள் தண்ணீர் சென்றுள்ளதாகவும் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜே. ரட்னாகர் ரெட்டி கூறினார்.

எனினும் அவர் உடல்நிலை தேறிவருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.என். சபாயா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG