அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 20 மார்ச், 2011

ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி, 'விழிப்படைவதற்கான அழைப்பு ' என்றது இந்தியா: விக்கிலீக்ஸ்

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகள் இந்தியா விழிப்படைவதற்கான அழைப்பு என இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்துடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பின்பற்றுதல், மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை தொடர்வதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தவும் பயன்படுத்த திட்டமிட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதுதரகத்தினால் அனுப்பப்பட்ட கேபிள் குறிப்பொன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
தேர்தலை புறக்கணிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்மானித்ததன் மூலம் அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதை தவிர்ப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவை ஒதுக்கித்தள்ள தீர்மானித்தமைக்கு ஆதாரமாகும் என இலங்கை, பங்களாதேஷ், பர்மா ஆகிய நாடுகக்குhன இந்தியாவின் இணைச் செயலாளர் மோஹன் குமார் தெரிவித்திருந்ததாக அக் கேபிள் குறிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சி வேட்பாளரின் கடும்போக்கு பிரச்சாரத்திற்கு மத்தியிலும் ராஜபக்ஷ ஒரு மிதவாதியாக இருப்பார் எனவும் 'சமாதானமும் இல்லை, யுத்தமும் இல்லை' என்ற நிலை அண்மைய எதிர்காலத்தில் தொடர்வதற்கான வாய்பிருப்பதாகவும் மோஹன் குமார் ஊகம் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய முயற்சிக்கும் நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியவடையாதிருப்பதை உறுதிப்படுத்துவதே தேர்தலுக்குப் பின் இந்தியா முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயம் எனவும் இது அமெரிக்காவின் நோக்கங்களுக்கு அமைவாக இருப்பது குறித்து மகிழ்;ச்சியடைவதாகவும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG