அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 15 மார்ச், 2011

அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை ஆராய பிரதமர் உத்தரவு

ந்திய அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை தொழில்நுட்ப ரீதியாக ஆராயுமாறு பிரதர் மன்மோகன் சிங் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை தாங்கும் திறன் அணுசக்தி நிலையங்களுக்கு எந்தளவு உள்ளது என்பது குறித்து ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் பேசுகையில் பிரதமர் தெரிவித்தார்.
சர்வதேச அணுசக்தி முகமை, ஜப்பான் அணுசக்தி அமைப்பு ஆகியவற்றுடன் இந்தியா தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது கல்பாக்கம் அணுமின் நிலையமும், 2002-ல் குஜராத் நிலநடுக்கத்தின்போது கக்ராபூர் அணுமின் நிலையமும் எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருந்ததையும் மன்மோகன் சிங் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ஜப்பானில் தற்போது நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக குளிரூட்ட இயலாத அணு உலைகள் வெடித்துள்ளதால், இந்தியாவில் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG