திருகோணமலை கம்பஹா காலி ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசார மாநாடுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்குகொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மேற்படி கூட்டங்களுக்கு வருகை தந்த ஜனாதிபதியை அந்தந்த பிரதேச அமைச்சர்கள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்களும் வரவேற்றனர்.
இக்கூட்டங்களில் உரையாற்றிய ஜனாதிபதி இன்னொரு இனத்துடன் எப்போதும் பகைமை பாராட்டி சண்டை பிடித்து நாட்டைப் பிரித்துக்கொண்டு எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி இன மத மொழி குல மாகாண பேதங்களையும் பகைமை குரோதங்களையும் மறந்து சகலரும் ஒன்றுபட்டால் தான் நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்ய முடியும். நாம் பிறந்த இந்தத் தாயகத்தைப் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு மேம்படுத்துவது எம்மெல்லோரதும் பொறுப்பு. சிலர் எம்மை வெட்டினாலும் பச்சை அல்லது நீலம் அல்லது மஞ்சள் அல்லது சிவப்பு என்றபடி கூறுவார்கள். ஆனால் எமது உடம்மை வெட்டினால் சிவப்பு நிற இரத்தம் தான் வரும். என்றாலும் பசிவரும்போது இந்த நிறங்கள் எமக்கு உதவாது.
எமது கிராமங்களில் பாதைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சீரில்லாவிட்டால் நாம்தான் கஷ்டப்பட நேரிடும். துன்பங்களை அனுபவிக்க வேண்டும். நாட்டில் சுபீட்சத்தையும் விமோசனத்தையும் ஏற்படுத்தக் கூடியவர்கள் நாமே என்பதை நிரூபித்துள்ளோம். இதனை எல்லா அரசியல் கட்சிகளும் புரிந்து கொண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டிலும் பாரிய அபிவிருத்தி இடம்பெறுகின்றது. கிழக்கு அபிவிருத்திக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றோம். இன்று கொழும்பு மட்டக்களப்பு உட்பட முழு நாட்டுக்கும், துரிதமாக செல்லக் கூடிய வகையில் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
திருமலை ஆஸ்பத்திரி ஐநூறு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அன்று இப்பகுதியில் நிலவிய நிலமை இப்போது இங்கில்லை. கடலில் மீன்பிடிக்கவோ விவசாயம் செய்யவோ இப்போது தடைகள் எதுவும் கிடையாது. திருமலை மாவட்டம் உட்பட முழு நாட்டையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். இதன் நன்மைகளை இந்நாட்டு மக்களும் அவர்களது எதிர்கால சந்ததியினரும் அனுபவிப்பர். உங்களை நான் பாதுகாப்பேன்.
மக்களுக்குச் சேவை செய்வதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்பதில்லை. மஹிந்த சிந்தனை திட்டத்தை நிறைவேற்றியுள்ள நாம் மஹிந்த சிந்தனை எதிர்காலத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதற்கு சகலரினதும் பூரண ஒத்துழைப்பு அவசியம். நான் உங்களது தோழன். உங்களது உறவினன். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் என்னை நம்புங்கள். 17ம் திகதி வெற்றிலை சின்னத்தை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் எனத்தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே எஸ்.எம். சந்திரசேன பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் ஆகியோர் ஆகியோரும் கம்பஹா மாவட்டத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச பந்து பண்டாரநாயக்க சரண குணவர்த்தன பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி ஆகியோரும் காலி மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்களான பியசேன கமகே குணரத்ன வீரக்கோன் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா ஆகியோரும் ஜனாதிபதியுடன் பங்கு கொண்டிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக