அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 18 மார்ச், 2011

கடாபியின் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஐ.நா. பாதுகாப்புச் சபை அனுமதி

லிபியாவில் அந்நாட்டின் தலைவர் கேணல் முவம்மர் கடாபியின் படைகளின் தாக்குதலிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸில் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

கடாபியின் படைகளுக்கு எதிராக கடல் மற்றும் வான்வழியான தாக்குதல்களை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லிபிய படைகளின் வான் தாக்குதல்களை நிறுத்தும் முகமாக லிபியாவில் விமான பறப்புத் தடை வலயத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகரித்துள்ளது.
தனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை தொடுக்கப்போவதாக கேணல்கடாபி அறிவித்த சில மணித்தியாலங்களில் ஐ.நா. பாதுகாப்புச் சபை இத்தீர்மானத்தை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பெங்காஸி நகரிலுள்ள மக்களை தான் மீட்கப்போவதாகவும் கிளர்ச்சியாளர்கள் மீது இரக்கமோ கருணையோ காண்பிக்கப்பட மாட்டாது எனவும் கடாபி இன்று தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்தையடுத்து, லிபிய படைகளின் மீது தாக்குல் நடத்துவதற்கு மேற்குலக நாடுகள் தாயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் மேற்படி அங்கீகாரத்தையடுத்து லிபியாவின் பெங்காஸி நகரில் ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டுள்ளளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG