அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 11 மார்ச், 2011

புலிகள் முகாம் குற்றச்சாட்டு வாபஸ்

மிழகத்தில் விடுதலைப் புலிகளின் மூன்று முகாம்கள் இயங்குவதாக தான் கூறியது தவறு என்று இலங்கைப் பிரதமர் தற்போது தெரிவித்திருக்கிறார்.

கடந்த புதனன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை பிரதமர் டி.எம். ஜயரட்ண அவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்கள், தமிழ் நாட்டில் மூன்று ரகசிய இடங்களில் பயிற்சி பெறுவதாக கூறியிருந்தார்.
அதில் இந்திய அரசாங்கத்துக்கு சம்பந்தமிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டவில்லை.
ஆனால், அதில் ஒரு முகாமில் முக்கிய பிரமுகர்களை கொலை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாக தனக்கு உளவுத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து இலங்கையும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்
இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு வன்மையாக மறுத்திருந்தது. தமிழகக் காவல் துறையும் இந்தக் கூற்றை மறுத்திருந்தது.
இந்நிலையில், வெள்ளியன்று இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு செவ்வியளித்த பிரதமர் ஜயரட்ண அவர்கள், அந்த விடுதலைப்புலிகள் முகாம்கள் குறித்த கருத்து தவறான தகவல்களின் அடிப்படையிலானது என்று கூறினார்.

1 கருத்துகள்:

சண்முககுமார் சொன்னது…

வணக்கம் தங்கள் படைப்புகள இந்த தளத்தில் இணைக்கவும்
தமிழ் திரட்டி

BATTICALOA SONG