அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 மார்ச், 2011

பார்வதி அம்மாள் அஸ்தி நாளை கரைப்பு: பங்கேற்கிறார் வைகோ

வி டுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அஸ்தி வங்கக் கடலில் நாளை கரைக்கப்படுகிறது. இதில் வைகோ பங்கேற்கிறார். அதனையொட்டி நடக்கும் அஞ்சலிக் கூட்டத்துக்கும் அவர் தலைமை தாங்கிப் பேசுகிறார்
.

இதுகுறித்த மதிமுகவின் அறிக்கை:

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தில் போற்றிடும் அன்னை பார்வதி அம்மையார் மறைந்த 31 ஆவது நாளாகிய மார்ச் 22 அன்று, தமிழ் ஈழத்திலும், தரணியில் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும், அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தலைநகர் சென்னையில், வங்கக் கடல் அலைகளில் மலர்களைத் தூவி நீர்க்கடன் ஆற்றும் நிகழ்ச்சி, பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற இருக்கிறது. பிரபாகரனை, தன் மணிவயிற்றில் சுமந்த அன்னை பார்வதி அம்மையாரின் ஈமச் சாம்பல், ஈழத்தில் இருந்து வந்து சேர்ந்து இருக்கிறது. அதனை, வங்கக் டலில் தூவிட இருக்கிறோம்.
அதே நேரத்தில், கடலுக்கு அப்பால் ஈழத்தில், கண்ணீர்க்கடலில் தத்தளிக்கும் தமிழ் ஈழ மக்களைப் பாதுகாத்து, அவர்கள் மானத்தோடும், உரிமையோடும் வாழ, அவர்களின் தாயக மண்ணை மீட்டெடுத்து, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைத்திட, அன்னை பார்வதி அம்மையாரின் நினைவாக வீர சபதம் ஏற்போம்!
எனவே, மார்ச் 22 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு, பத்தினித்தெய்வம் கண்ணகி சிலை அருகில், தமிழ் ஈழ உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து, நம் அன்னையின் புகழ் அஞ்சலியில் பங்கு ஏற்குமாறு அன்போடு வேண்டுகிறேன.
-இவ்வாறு வைகோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1 கருத்துகள்:

Ivan Yaar சொன்னது…

வைகோ வும் சராசரி அரசியில்வாதியே. இலங்கை தமிழர்கள் நலனுக்காக பேசினால் மட்டும் நல்ல
அரசியல்வாதி ஆக முடியாது. வைகோ எதற்காக ம தி மு க ஆரம்பித்தார்? அப்போது எத்தனை
தொண்டர்கள் தீ குளித்தார்கள் என்று தெரியுமா? பின்பு மீண்டும் தி மு க வுடன் கூட்டணி வைத்தார்.
அப்போது கலைஞர் வைகோவை பார்த்து கூறிய வசனம் உங்களுக்கு நினைவிருக்கிகறதா??
"தம்பி நான் உன்னை பிரிந்தேனா காலம் நம்மை பிரித்ததா". அப்போது வை கோ கலைஞரை பார்த்து
அழ , கருணாநிதி அழ நாடகம் நடை பெற்றது. பின்பு தி மு க வை விட்டு பிரிந்து
தனியே நின்றார். எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார் . இலங்கை தமிழருக்காக பேசிய போது
ஜெயலலிதா POTA சட்டத்தில் வைகோவை சிறைக்கு அனுப்பினார். பின்பு எல்லாவற்றையும் மறந்து
அ தி மு க விடம் கூட்டணி சேர்ந்தார். இப்போது ஜெயலலிதா 32 தொகுதிகளை தரவில்லை என்பதற்காக
கூட்டணியில் இருந்து மீண்டும் பிரிந்து விட்டார்.

வை கோ விற்கு என்ன கொள்கை இருக்கிறது?? சிந்தியுங்கள்??

என்னை பொறுத்த வரை வைகோ வும் RAMDOSS போல தான், சந்தர்ப்ப வாத அரசியல் வாதி.

BATTICALOA SONG