அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 3 மார்ச், 2011

என்ன அவசரம் ? - கருணாநிதி கேள்வி

மிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல்களை ஏப்ரல் 13 அன்றே, அவ்வளவு விரைவாக நடத்தவேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்ய இன்னும் சற்று கால அவகாசம் அளித்திருக்கலாமே எனும் அவர், மே 13 அன்றுதான் வாக்கு எண்ணிக்கை என்பதிலும் சில சிக்கல்கள் இருப்பதாக வெளியிட்டுள்ள் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டுகிறார்.
தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 16 அன்று முடிவடையும். அந்நிலையில் அத்ற்கடுத்த நாளே புதிய சட்டமன்றம் அமைக்கப்பட்டாக வேண்டும், புதிய அமைச்சரவையும் பதவியேற்றாக வேண்டும்.
அதாவது மூன்றே நாட்களில் கட்சிகள் வென்றுள்ள இடங்களைப் பொறுத்து, பெரும்பான்மைக் கட்சி எதுவென்று தெரிந்து, அதன் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுநருக்கும் தெரிவிக்கப்பட்டு, அவர் புதிய முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவேண்டும். அவ்வளவு நெருக்கடியில்தான் கட்சிகள் செயல்படவேண்டுமா? இதையெல்லாம் மத்திய தேர்தல் ஆணையம் எண்ணிப் பார்க்காமலா இருந்திருக்கும் என்று வியக்கும் அவர், தேர்தல் ஆணையம் சுயாதீனமான அமைப்பு என்றாலும் கூட அதன் செயல்பாடுகள் சந்தேகத்திற்கப்பாற்பட்டதாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு மார்ச் 28லிருந்து ஏப்ரல் 11வரை நடைபெறவிருக்கிறது, 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுவார்கள், அந்த நேரத்தில் பிரச்சாரம் தீவிரமாக இருக்கும், அதனால் மாணவர்களின் கவனம் சிதறும், தவிரவும் ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்களும் தேர்வில்தான் அதிகமாக கவனம் செலுத்தவேண்டியிருக்கும், அதனால் மற்ற பணிகள் பாதிக்கப்படும் எனவே தேர்தல் தேதி மாற்றியமைக்கப்படவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
இதனிடையே ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்றக்கழகத்திற்கு திமுக தலைமையிலான கூட்டணியில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG